முகக்கவசம் அல்லது முகமறைப்பு பயன்படுத்துவது கட்டாயம்

உங்களது பங்கைச் செய்திடுங்கள். COVID-19 பரவுவதைத் தடுத்திடுங்கள்.

பொது உள்ளரங்கங்களில் முகக் கவசம் அணிவது அல்லது வேறொரு முகமறைப்பு உபகரணத்தை பயன்படுத்துவது இப்போது அவசியமாகும்

ஆகஸ்ட் 7, 2020 அதிகாலை 12:01 மணியிலிருந்து அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பகுதிகளில் முகக்கவசம் அல்லது முகமறைப்பு அணிவது அவசியம்.

மருத்துவக் காரணங்களுக்காக முகக் கவசம் அல்லது முகமறைப்பு அணிய முடியாத நபர்கள், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அல்லது ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக்கோவை படி விலக்கு தேவைப்படுவோர் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு

பொது இடங்கள் அல்லது பிறசூழல்களில் முகக் கவசம் அணிவது அல்லது முகத்தை மூடிக் கொள்வது ஆகியவை குறைந்தது 2 மீட்டர் இடைவெளியை பராமரிப்பது அல்லது கை கழுவுதல் போன்ற நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மாற்றாக அமையாது.

Masks
Footer
Complementary Content
${loading}