ஸ்டைரோஃபோம் பேக்கேஜிங்கை நீல பெட்டியிலோ பச்சைத் தொட்டியிலோ போடுவதற்கான அனுமதி எப்போதும் இருந்ததில்லை மேலும் அக்டோபர் 19, 2020 முதல், ஸ்டைரோஃபோம் பேக்கேஜிங் இனி தெளிவான குப்பைபைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படாது.
உங்கள் சுத்தமான ஸ்டைரோஃபோம் பேக்கேஜிங்கை மார்க்கம் மறுசுழற்சி டிப்போ வில் போடவும்.
2002 ஆம் ஆண்டு முதல், மார்க்கம் நகரம் எமது நான்கு மறுசுழற்சிக் டிப்போகளில் சுத்தமான, தளர்வான ஸ்டைரோஃபோம் குஷன் மற்றும் உணவுத்தர பேக்கேஜிங் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது, மேலும் மார்க்கம் மக்கள் இந்தப் பொருளை நிலநிரப்பலில் போடுவதைத் தவிர்த்து, இவை புதிய தயாரிப்புகளாக மறுசுழற்சி செய்யப்படுவதை உறுதிசெய்கிறது.
ஸ்டைரோஃபோம் உணவுக் கொள்கலன்களான இறைச்சி தட்டுகள், டேக்-அவுட் கொள்கலன்கள், கப் மற்றும் தட்டுகள் ஆகியவை தொடந்து உங்கள் தெருவோர சேகரிப்பு சேவையில் ஏற்றுக்கொள்ளப்டும். அழுக்கடைந்த பொருட்களை தெளிவான குப்பைபைகளில் வைக்கவும். நீல பெட்டியில் அல்லது பச்சை தொட்டியில் வைக்க வேண்டாம்.
ஸ்டைரோஃபோமை நிலநிரப்பல், வீதிகள் மற்றும் நமது நீர்வழிகள் ஆகியவற்றிலிருந்து விலக்கி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவுங்கள்! பொறுப்பான மறுசுழற்சிக்காக, மறுசுழற்சி டிப்போவில் சுத்தமான ஸ்டைரோஃபோம் கொள்கலன்களைப் போடுங்கள்.