ஒற்றைப்-பயன்பாட்டு பிளாஸ்டிக் என்பது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூர எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகும்.
இவற்றில் மிகவும் பொதுவானவை:
● குளிர்பான கோப்பைகள் மற்றும் மூடிகள்
● காபி / சூடான பான மூடிகள்
● ஸ்ட்ராக்கள் மற்றும் கலக்கும் குச்சிகள்
● பிளாஸ்டிக்கிலான கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள் மற்றும் கத்திகள்
● ஸ்டைரோஃபோம் பேக்கேஜிங் மற்றும் டேக்-அவுட் உணவுக் கொள்கலன்கள்
● மளிகை / காய்கறி பைகள்
ஒற்றைப்-பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள், மட்டுப்படுத்தப்பட்ட மறுபயன்பாடு, மறுசுழற்சித் திறன் அல்லது உக்கும் தன்மை கொண்டுள்ள காரணத்தால், அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் சிக்கலானவையாகும். கூடுதலாக, அவற்றில் பல நமது சாலைகள், பூங்காக்கள், வழிதடங்கள் மற்றும் சிற்றோடைகளில் குப்பைகளாகச் சேர்கின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு திசைதிருப்பலுக்கான தனது உறுதிப்பாட்டை நிரூபிப்பதன் மூலம் மார்க்கம் நகரம் அதன் தலைமைப் பங்களிப்பைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
மார்க்கமின் திசைதிருப்பல் உத்தி: 2020-2023, 85% நகராட்சி கழிவு திசைதிருப்பல் இலக்கை அடைய வடிவமைக்கப்பட்ட உத்திகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும்.